உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
உக்ரைனில் 14 மாணவர்கள் உட்பட 70 இலங்கையர்கள் உள்ளதாகவும், அவர்களில் எட்டுமாணவர்கள் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஏனையவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கான வேண்டுகோள்களை விடுத்துள்ளதாகவும் இலங்கை தூதுவர் ரிஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளதால் நாங்கள் எடுக்ககூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ஆராய்ந்துவருகின்றோம் என கூறிய அவர், ஆனால் அனைத்து இலங்கையர்களுடனும் தொடர்பில் உள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.