அரச ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து வெளியான தகவல்
அரச சேவையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதிக்குப் பின்னர் இணைந்த ஊழியர்களின் ஓய்வூதிய உரித்தை உறுதிப்படுத்தி, அரசாங்கம் புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
2016.01.01 அன்று அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளைத் திருத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சுற்றறிக்கை
இது தொடர்பான 21/2017(1) இலக்க சுற்றறிக்கை பெப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களை இந்தப் புதிய திருத்தத்திற்கு ஏற்ப திருத்தியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் வழங்கப்படும் அனைத்து புதிய நியமனக் கடிதங்களிலும், அரசாங்கத்தின் கொள்கைப்படி இந்த ஓய்வூதியத் திருத்தம் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு 2016-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.