இலங்கையில் அதிரடி கைதான இந்தியப் பிரஜைகள் ; சோதனையில் சிக்கிய பொருட்கள்
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 775 கிராம் தங்கத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில், மூன்று இந்தியப் பிரஜைகள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை, ஆமர் வீதிப் பகுதியில் உள்ள உணவகமொன்றில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
சட்டவிரோத தங்கம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 30, 45 மற்றும் 50 வயதுடைய இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.