ரி20 உலக கிண்ண போட்டி ; அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி
இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் பாய்ந்த பொலிஸ் ஜீப் ; நாடாளுமன்றில் சாள்ஸ் எம்.பி அம்பலப்படுத்திய உண்மை
நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Gareth Delany அதிகபட்சமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Hardik Pandya 03 விக்கெட்டுக்களையும், Arshdeep Singh மற்றும் Jasprit Bumrah ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் 97 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 12.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் அதன் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 52 ஓட்டங்களை பெற்ற போது, உபாதை காரணமாக இடைநடுவே ஆடுகளத்தில் இருந்து வெளியேறிய நிலையில், Rishabh Pant ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை பெற்றார்.