போரை நிறுத்துங்கள் ...ரஷ்யா அதிபரிடம் தொலைப்பேசியில் பேசிய இந்திய பிரதமர் மோடி
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான், கடல் மற்றும் தரை மார்க்கமாக நடத்தப்பட்ட முப்படைத் தாக்குதலில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தன. அதேபோல் உக்ரைனும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்கிறது. அதனால் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும். ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவர உலக சமூகம் செயல்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பாக இந்தியா தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்றும், இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் பேச வேண்டும் என்றும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் டாக்டர் இகோர் பாலிகா தெரிவித்தார். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர், ‘உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும்’என்று வலியுறுத்தினார்.
மேலும், உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விளாதிமிர் புதினிடம் எடுத்துரைத்தார்.