இலங்கை வந்தடைந்த இந்திய கமோர்டா கப்பல்
இந்திய கடற்படையின் கமோர்டா கப்பல் கடந்த 20 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
யோகா நிகழ்வு
இதன்போது, இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி பிரசாந்த் குமார் மிஸ்ரா இலங்கையின் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பனாகொடவை சந்தித்தார்.
இந்நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருகோணமலை துறைமுகத்தில் நேற்று (21) விசேட யோகா நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இலங்கை கடற்படை அதிகாரிகள் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கடற்படையின் ஒருங்கிணைப்புடன் இந்திய கடற்படையின் கமோர்டா கப்பலானர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.