கொழும்பில் மர்மபொருள் கடத்தல் ; சந்தேக நபர் அம்பாறையில் கைது
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச விடுதிக்கருகில் வெள்ளிக்கிழமை (2004.06.21) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் கொழும்பு புற நகர் பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 25 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளோடு சந்தேக நபர் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.