வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல் ; வரப்போகும் புதிய மாற்றம்
இலங்கையில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் வாகனக் காப்புறுதி அட்டைகள் (Digital Motor Insurance Cards) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டம் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் இலங்கை காவல்துறையினர் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வாகனக் காப்புறுதி சேவைகளை நவீனமயமாக்குவதற்கும், வாகன உரிமையாளர்களுக்குக் காகிதமற்ற (Paperless) இலகுவான நடைமுறையை வழங்குவதற்கும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுகிறது.
பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் பதிப்புகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் (Environmental Sustainability) பெரும் பக்கபலமாக அமையும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.