கடவுச்சீட்டு விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பு
இரண்டாம் இணைப்பு
கடவுச்சீட்டு விநியோகம் மீண்டும் வழமைக்கு...
கடவுச்சீட்டு விநியோகிக்கும் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இன்று காலை கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்குத் இடையூறு ஏற்பட்டிருந்தது.

முதலாம் இணைப்பு
கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் இன்று (11) முற்பகல் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாகவே இவ்வாறு கடவுச்சீட்டு விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.