றீச்சா அட்சய பாத்திரம் உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன..? அம்பலமாகும் CCTV காணொளிகள்
கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா (Reecha Organic Farm) வளாகத்தில் நடைபெற்ற “அட்சய பாத்திரம்” உணவுத் திருவிழாவின் போது ஏற்பட்ட பரபரப்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பான CCTV காணொளிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் மற்றும் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நிகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் நிறுவனத் தலைவர் பாஸ்கரன் கந்தையா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள விளக்கமும், சம்பவத்தின் பின்னணி தகவல்களும் இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.