கடுகன்னாவ மண்சரிவு ; உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் நாளை (24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாளை பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்:

மாற்று வழிகள்
இதன்படி மாற்று வழிகள்: கணேதென்ன - மஹந்தேகம ஊடாக கண்டி திசைக்கும்,
கொழும்பு திசைக்கும் மாவனெல்லை - ஹெம்மாத்தகம ஊடாககண்டி திசைக்கும்,
கொழும்பு திசைக்கும் மாவனெல்லை - ஹதரலியத்த ஊடாக கண்டி திசைக்கும்,
கொழும்பு திசைக்கும் ரம்புக்கன ஊடான மலையக ரயில் மார்க்கம்
மேலும், உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அனர்த்த நிவாரண சேவைப் பிரிவு தற்போது செயற்பாட்டில் உள்ளது.
அனர்த்தம் காரணமாக உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்படின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:
மாவனெல்லை வலயக் கல்விப் பணிப்பாளர்: 071 80 15 390
மாவனெல்லை கல்விப் பணிப்பாளர்: 071 816 64 01 / 071 81 66 401
இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது, பயணத்திற்கு எடுக்கும் நேரம் குறித்து பரீட்சார்த்திகளும், பெற்றோர்களும், பெரியோர்களும் விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.