நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை கட்டணக் குறைப்பு
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் பெரி' (Subham Ferry)) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று( 04.11.2026) காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டணக் குறைப்பு
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும்- காங்கேசன்துதுறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் இந்திய ரூபாவில் 5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.
பயணப் பொதி சலுகை,
பயணிகள் தங்களது உடமைகளில் 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
கூடுதல் லக்கேஜ் கட்டண விவரங்கள்
30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: அனைத்தும் இந்திய ரூபாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
5 கிலோ: ₹1500 (LKR 5250 - USD 16)
10 கிலோ: ₹2500 (LKR 8750 - USD 26)
30 கிலோ: ₹6000 (LKR 21000 - USD 63)
பயணிகள் கொள்ளளவு
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும்
நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம்.
திருத்தப்பட்ட பயணக் கட்டண விபரங்கள்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை ((Economy):
பெரியவர்கள் (Adult): ₹5500 | LKR 19250 | USD 58
குழந்தைகள் (Child): ₹5000 | LKR 17500 | USD 53
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco):
Economy - பெரியவர்கள்: ₹5500 | LKR 19250 | USD 58
Economy - குழந்தைகள்: ₹5000 | LKR 17500 | USD 53
Pre Eco - பெரியவர்கள்: ₹6000 | LKR 21000 | USD 64
Pre Eco - குழந்தைகள்: ₹5500 | LKR 17250 USD 58
நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த வருடம்போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது