காதலி யாருக்கு ;இன்ஸ்டாகிராம் சிறுமிக்காக நடந்த பயங்கரம்
காதலி யாருக்கு என்பதில் ஏற்ப்பட்ட மோதலில் மாணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் கேரளாவை அடிர வைட்டதுள்ளது.
திருவனந்தபுரத்தில் பிளஸ்-1 மாணவனை கொன்று உடலை சாக்கு மூடையில் கட்டி வீசப் பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக இளம்பெண் உள்பட3 பேர் சிக்கியுள்ளனர்.
திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பாங்கப்பாறையை சேர்ந்தவர் அபிராம் (வயது 16), பிளஸ்-1 மாணவர். நேற்று முன்தினம் மதியம் நண்பர்கள் போனில் அழைப்பதாக கூறி வீட்டில் இருந்து அபிராம் புறப்பட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததனால் பெற்றோர் பதற்றமடைந்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து அபிராமை தேடினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அபிராம் செல்போன் சிக்னலை கண்டறிந்தனர்.
பாங்கப்பாறையில் உள்ள ஒரு அடர்ந்த பகுதியில் செல் போன் சிக்னல் காட்டியது. அங்கு சென்ற அவர்களுக்கு பார்த்த போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அபிராம்
கொல்லப்பட்டநிலையில் சாக்குமூடையில் உடல் கட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக உமா மற்றும் 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களின் உதவியுடன் திட்டமிட்டு கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதாவது அபிராம், ஒரு சிறுமியுடன் இன்ஸ்டகிராம் மூலம் சாட்டிங் செய்துள்ளார். அந்த சிறுமி, 17 வயது சிறுவன் ஒருவனை காதலித்துள்ளார்.சிறுமியுடன் அபிராம் பேசுவதை காதலன் விரும்பவில்லை. இதனால் அவன், அபிராமை கண்டித்துள்ளார்.
ஆனால் அபிராம் கேட்கவில்லையாம். இது காதலனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சிறுமி மூலம் குறிப்பிட்ட இடத்துக்கு அபிராமை வரவழைத்து கொல்லப்பட்ட பகீர் தகவல் அம்பலமாகி உள்ளது.