இலங்கையின் பிணை எடுப்புப் பொதி மீதான IMF இரண்டாவது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வை இன்று (07.03.2024) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் திட்டமிடப்பட்ட ஆரம்ப சந்திப்புடன் ஆரம்பிக்கவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X தளத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இது ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது.
ஒரு வெற்றிகரமான மதிப்பாய்வை முடித்து, மூன்றாவது தவணையை அணுகுவதற்கு வழி வகுக்கும் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றுத் தெரிவித்துள்ளார்.
"இது நமது வளர்ச்சிப் பாதையை விரைவுபடுத்தும், பொருளாதாரத்தில் அதிகரித்த நம்பிக்கையை வளர்க்கும்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.