இங்கிலாந்து இளவரசி டயனா உயிருடன் இருந்திருந்தால்! பிரித்தானிய ஓவியரின் கற்பனை
இளவரசி டயனா உயிருடன் இருந்தால் அரச குடும்பத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் , அவர் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் எவ்வாறு பழகியிருப்பார் என்பதை கற்பனை செய்து பிரிட்டனின் Autumn Ying என்ற கலைஞர் ஓவியங்களை வரைந்துள்ளார்.
கடந்தகால தற்போதைய படங்களை பயன்படுத்தி அவர் இளவரசர்களும் அவர்களின் குடும்பத்தினரும் டயனாவுடன் ஒன்றாக இருக்கும் தருணங்கள் எப்படி இருந்திருக்கும் என அவர் கற்பனை செய்துள்ளார்.
ஹரி மேர்கனின் திருமணத்தினால் கவரப்பட்ட ஓவியர் ஜி அதன் பின்னர் தனிப்பட்ட படங்கள் பலவற்றை வரைந்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் தனது படைப்பை பகிர்ந்துகொண்டுள்ள அவர், அரசகுடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்களின் பதிப்பு இதோவருகின்றது என குறிப்பிட்ட அவர், விலைமதிப்பற்ற விடயமான குடும்ப பிணைப்பை நான் வெளிப்படுத்த விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.







