கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு; வீதியில் நிகழ்ந்த சோகம்
குருணாகல், குளியாப்பிட்டி - ஹெட்டிபொல வீதியில் நேற்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் ஒன்று குளியாப்பிட்டியிலிருந்து ஹெட்டிபொல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவியும்
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவியும் படுகாயமடைந்துள்ள நிலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 64 வயதுடைய கணவனும் 57 வயதுடைய மனைவியுமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தினை ஏற்படுத்திய வாகனம் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.