இன்று இரவு கொட்டி தீர்க்கப்போகும் கனமழை ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (1) முற்பகல் 10.30 க்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், இன்று இரவு 11.30 வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மாலையில் அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.