தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் மாணவர்களிடம் பாலியல் சேட்டை ; பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
அம்பாறை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில், சுகாதாரப் பரிசோதனை என்ற பெயரில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் பாலியல் சேட்டை புரிந்ததாகக் கூறப்படும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரான PHI தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களிடம் சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்ளும் போது, தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முறையற்ற வகையில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.