பாலியல் வன்கொடுமை ; 71 வயது இலங்கையருக்கு 13 ஆண்டுகள் சிறை!

Sri Lankan Peoples Sexual harassment Australia Child Abuse Buddhism
By Sulokshi Oct 08, 2026 01:34 PM GMT
Report

    அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்பேர்ண் நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ‘தம்ம சரண’ (Dhamma Sarana) விஹாரையின் தலைமைத் துறவியாகப் பணியாற்றிய 71 வயதுடைய நாோதுன்ன விஜித (Naotunne Vijitha) என்பவருக்கே, விக்டோரியா மாகாண மாவட்ட நீதிமன்றத்தால் வியாழக்கிழமை (08) இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை ; 71 வயது இலங்கையருக்கு 13 ஆண்டுகள் சிறை! | Harassment 13 Years In Prison For Sri Lankan Monk

முடிவுக்கு வந்த வழக்கு

சமூகத்தில் தனக்கிருந்த நற்பெயரையும், பௌத்த சமூகத்தினர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் இந்தத் துறவி கடுமையாக மீறியுள்ளார் என நீதிபதி பர்தீப் திவானா (Pardeep Tiwana) சுட்டிக்காட்டினார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைத் தொடர்பிலான 9 குற்றச்சாட்டுகள் மற்றும் குழந்தைக்கு எதிரான ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டமைக்கான 8 குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் விஜித மீதான வழக்கில் 2025 ஆம் ஆண்டில் நிரூபிக்கப்பட்டன.

அன்று தமிழர்களின் கண்ணீரில் மகிழ்ச்சி ; இன்று மஹிந்த ராஜபக்சவை பழி வாங்கும் கர்மா!!

அன்று தமிழர்களின் கண்ணீரில் மகிழ்ச்சி ; இன்று மஹிந்த ராஜபக்சவை பழி வாங்கும் கர்மா!!

மெல்பேர்ணின் ஸ்பிரிங்வேல் (Springvale) மற்றும் கீஸ்பரோ (Keysborough) ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த இந்த ஆலயத்தில், 1994 ஆம் ஆண்டுக்கும் 2002 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் அருகிலுள்ள அறைகளில் இருந்த வேளையில், இளம் சிறுமிகளைத் தனது வதிவிட அறைக்கு அழைத்துச் சென்று விஜித தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒரே வீட்டில் 21 மனைவிகளுடன் வாழும் யாசகர் ; ஆச்சரியத்தில் வலைதளவாசிகள்

ஒரே வீட்டில் 21 மனைவிகளுடன் வாழும் யாசகர் ; ஆச்சரியத்தில் வலைதளவாசிகள்

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சமய நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காகத் தங்கள் குடும்பத்தினருடன் இந்த ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். தங்கள் குழந்தைகள் ஆலயத்தில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பிய பெற்றோர்களின் நம்பிக்கையை இந்தத் துறவி துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தீர்ப்பின் போது நீதிபதி திவானா தெரிவித்தார்.

இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீடித்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் பௌத்த சமய வழிபாடுகளுடன் தொடர்புடைய அச்ச உணர்வுகளை இன்னமும் எதிர்கொண்டு வருவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

துஷ்பிரயோகம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை அடுத்து, 2023 ஆம் ஆண்டில் விஜித கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார்.

மனைவியை காண மஹிந்த ராஜபக்சவும் சிறைக்கு!

மனைவியை காண மஹிந்த ராஜபக்சவும் சிறைக்கு!

விசாரணையின் போது அவர் குற்றத்தை மறுத்ததுடன், சம்பந்தப்பட்ட புகார்தாரர்களில் சிலரைத் தனக்கு நினைவில் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதன்படி, விஜித தனது சிறைத்தண்டனையின் முடிவில் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்களைக் கடந்த பின்னரே பிணையில்வெளிவருவதற்குத் தகுதி பெறுவார்.

தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்த ஆதரவாளர்களை நோக்கித் துறவி புன்னகைத்து, கையசைத்தமையைக் கண்டு பல பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் .

ஷிரான் பாசிக்கின் 10 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

ஷிரான் பாசிக்கின் 10 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்

இலங்கையில் பிறந்து 15 வது வயதில் பௌத்த துறவு பூண்ட விஜித, பின்னர் சுவீடனுக்குக் குடிபெயர்ந்து அங்கு குடியுரிமை பெற்றவர் என்பதும், அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ‘தம்ம சரண’ ஆலயத்தின் தலைமைத் துறவியாகப் பொறுப்பேற்றார் என்பதும் நீதிமன்ற விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின்னர் விஜித நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் (Deportation) எனவும், தான் சுவீடனுக்கே திரும்பத் தயாராக இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்

வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்

அவருக்கு டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்) போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் முன்னதாகவே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ள போதிலும், விஜித கணிசமான காலத்திற்குச் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US