அன்று தமிழர்களின் கண்ணீரில் மகிழ்ச்சி ; இன்று மஹிந்த ராஜபக்சவை பழி வாங்கும் கர்மா!!
தமிழர்களை கொன்றொழித்து உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்த அரசனாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் மன்னனாய் காட்டிக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று பல் பிடுங்கிய பெட்டிப்பாம்பாய் அடங்கி கிடக்கின்றார்.
அரசாங்க சொத்தை அபகரித்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகன் நாமல் ராஜபக்ச சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

காலம் கைகொட்டி சிரிக்கின்றது
எந்தனையோ தமிழ் பெண்களை விதவையாக்கி, ஆயிரகணக்கான குழந்தைகள் தாய் தந்தையை இழந்து அநாதைகளாக்கி , பிள்ளைகளை பறிகொடுத்து இன்றுவரை வீதியில் போராடி வரும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கண்ணீர் , மஹிந்த ராஜபசவை நடக்க முடியாத நிலையில் காலம் தள்ளிவிட்டு கைகொட்டி சிரிக்கின்றது.
எந்த மக்கள் முன் தன்னை அசைக்க முடியாத பெரும் அரக்கனாய் காட்டிகொண்டாரோ இன்று அதே மக்கள் முன்னிலையில் கூனிகுறுகி நிற்கும் நிலையை இறைவன் அளித்துள்ளான்.

தமிழ் மக்கள் சிந்திய குருதிகளின் வெப்பம் இன்று பெரும் தீச் சுவாலையாகி ராஜபக்ச குடும்பத்தை சூழ்ந்து பெரும் தீப்பிழம்பாகி நிற்கின்றது. கேட்பதற்கு யாரும் இன்றி தமிழ் மக்கள் நிர்க்கதியின்றி சிந்திய கண்ணீரும் , கதறி அழுத ஓலமும், இறைவன் செவியை எட்டியது என்பதற்கு இன்று ராஜபக்சர்களின் அழிவுகாலமே சாட்சியாகி நிற்கின்றது.