ஒரே வீட்டில் 21 மனைவிகளுடன் வாழும் யாசகர் ; ஆச்சரியத்தில் வலைதளவாசிகள்
இன்றைய இளைஞர்களுக்கு பெண் கிடைப்பதே கேள்விக்குறியாக இருக்கும் இந்த காலத்தில், யாசகர் ஒருவரை 21 பெண்கள் தாமாகவே முன் வந்து அவரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 35 வயது யாசகர் ஒருவர் தனக்கு 21 மனைவிகள் இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.

வாழ்க்கை துணை
அதுமட்டுமின்றி, தனது மனைவிகள் அனைவரின் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வதே தனக்கு சிரமமாக இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
மோரு மியா என்ற அந்த நபர், தான் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயபடுத்தவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள பெண்களே முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் ஒருபோதும் திருமண பேச்சை தொடங்கியதில்லை என்றும், 21 பேர் தாங்களாகவே முன் வந்து எனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்று கோரிக்கை வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
21 மனைவிகள் இருந்தாலும் மோரு மியாவின் வாழ்க்கை மிகவும் எளிமையானதாகவே இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே ஒரு சிறிய அறை கொண்ட வீட்டில் தான் வசித்து வருவதும் யாசகம் எடுப்பதையே தனது முக்கிய வருமானமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தினசரி வாழ்க்கையிலும் மனைவிகள் மாறி மாறி பங்கேற்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மனைவி அவருடன் யாசகம் எடுக்கச் செல்வதாகவும், பின்னர் அடுத்த மனைவிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
அவரது 21 மனைவிகளின் பெயர்களைக் கேட்டபோது, அவரால் சிலரது பெயர்களை மட்டுமே நினைவுகூர முடிந்ததாக கூறப்படுகிறது.