மூன்று கிரகங்களின் பெயர்ச்சி... ஆவணியில் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்தான்!
எதிர்வரும் ஆவணியில் சனி, குரு, புதன் கிரகங்கள் வக்ரமடைந்து பெயர்ச்சி ஆகும் நிலையில், எந்த ராசிக்காரர்களுக்கு தலைவிதி மாறப்போகிறது, அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது என பார்க்கலாம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். லாபம், வருமானம் பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆன்மீக காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலக்த்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரும். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வேலையில் வெற்றி பெறவும் வாய்ப்புகள் உண்டு. வரும் 140 நாட்களும் இந்த ராசிக்காரர்களுக்கு குரு, செவ்வாய், புதன் மூலம் சிறப்பு அருள் பொழியும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களே நிதி நிலைமை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எதிரபாராத வகையில் பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த மாதம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழில் வியாபாரத்திற்கு ஏற்ற காலம் அமையும்.
மீனம் : மீன ராசிக்காரர்களே நிதி நிலைமை மேம்படும். வருமானம், சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் துறையில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் ஒவெற்றிகளை அள்ளித் தரும் மாதமாக இருக்கும்.
பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் வேலையை கவனித்து பாராட்டுவார்கள். இதனால் அலுவலத்தில் உங்களுக்கு கவுரவம் கிடைக்கும். வியாபாரத்திற்கு ஏற்ற காலம் அமையும். வருமானம் பெருகும்.