இலங்கையில் அதிகாலையில் பெண்கள் மீது துப்பாக்கிசூடு ; தீவிரமாகும் விசாரணை
கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் 6வது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பெண் காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.