அதிகாரிகளை மிரள வைத்த இளைஞனின் சூட்சமம் ; வசமாக பிடிபட்ட சந்தேக நபர்
பதுளை, ஹிதகொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருள் பக்கற்றுகளை பல்வேறு இடங்களில் வைத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், எல்ல பகுதியில் வைத்து பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை, பிபில மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு போதைப்பொருள் பக்கற்றுகளை வைத்துச் சென்ற பின்னர், எல்ல மற்றும் பண்டாரவளை பகுதிகளில் உள்ள இடங்களுக்கு பக்கற்றுகளை எடுத்துச் செல்லும் நோக்கில் பயணித்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 போதைப்பொருள் பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.