புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி
தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளர்.

தீவிர சிகிச்சை
இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. குறித்த பொறியியலாளர் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்இமைக்கும் நேரத்தில் உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார். வாலிபருக்கு தீவிர சிகிச்சை உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.