தமிழர் பகுதியொன்றில் பிடிபட்ட கொழும்பு இளைஞன் ; சிக்க வைத்த இரகசியத் தகவல்
திருகோணமலை, சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாம் அதிகாரிகளுக்குபுதன்கிழமை (02) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸாரால் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.