அரசாங்கம் வாய்ப்பு கொடுத்தால் ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்துவேன்; அமைச்சர் மேவின் சில்வா
அரசாங்கம் தனக்கு சந்தர்ப்பம் வழங்கினால், டெங்கு பரவலை ஒரு வாரத்திற்குள் கட்டுப்படுத்த முடியும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் இந்த திட்டத்தில் ஈடுபடவில்லை, தற்போதைய சுகாதார அமைச்சர் நல்ல நண்பர், அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஒரு அமைச்சராக, அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அனைத்து அதிகாரிகளையும் ஒரு வட்ட மேசைக்கு அழைத்து டெங்கு பரவாமல் தடுக்க இரண்டு வார கால அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றும் மேவின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கண் திறந்து செயற்பட வேண்டும். அத்துடன் பதவிகள், சம்பளம், வாகனங்கள் எதுவும் வழங்காமல் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் மக்களின் ஆதரவுடன் டெங்கு பரவுவதை ஒரு வாரத்திற்குள் தடுத்து நிறுத்துவேன் எனறும் மேலும் தெரிவித்துள்ளார்.