யாழில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில் தென்னிலங்கையர்கள் அடாவடி!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில், தமிழர்கள் முன் பதிவு செய்த ஆசனைத்தை தென்னிலையர்கள் அமர் சென்றதுடன் அடாவடியிலும் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்து ஏறியிருக்கின்றனர்.
அதிகாரிகள் வந்தபோதும் அடங்கவில்லை
அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டுள்ளார்.
அதனை மறுப்பு தெரிவித்த அவர்கள் , தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.
தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.
பயணிகள் விசனம்
இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதனை ஏற்காத சிங்கள பயணிகள், சண்டித்தனம் செய்ததுடன் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும், புகையிரதத்தில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.