உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து துரத்தப்படும் மஹிந்த ராஜபக்ச!
கொழும்பு - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெகுவிரைவில் செல்லவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் இன்று 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா
இதனைத்தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இல்லத்தை அரசிடம் கையளித்து செல்லபோவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் புதிய சட்டத்தின் கீழ் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த சட்டமூலம், முன்னாள் ஜனாதிபதிகள் தற்போது ஆக்கிரமித்துள்ள அரசு சொத்துக்களை அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்காக மறு ஒதுக்கீடு செய்யும் அதே வேளையில், ஓய்வூதிய பலன்களைப் பாதுகாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது