2021 இல் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை 2022 இல்......ஆச்சர்யப்படுத்தும்; நிபுணர்கள் கணிப்பு
இன்றுடன் இந்த வருடன் முடியவுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம் விலையானது 2022 ஆம் ஆண்டில் தூள் கிளப்பலாம் என துறைசார் நிபுணர்கள் கணித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டில் தங்கம் விலையானது 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9,000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இதுவே நீண்டகால நோக்கில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் என்னதான் தங்கத்தின் விலையானது அதிகரித்தாலும், நாங்கள் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் இருப்போம் என மக்களுக்கு தங்கத்தின் மீதுள்ள மோகமும், காதலும் குறையவில்லை.
கொரோனா, ஓமிக்ரான் என வரிசைக் கட்டி தங்கத்திற்கு ஆதரவளிக்க பல காரணிகள் சந்தையில் வந்து கொண்டுள்ளன. இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றது.

முக்கிய முதலீடு :
அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்லாது, முதலீடுகளிலும் முக்கிய அம்சம் பொருந்திய முதலீடுகளில் ஒன்றாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் எந்த நெருக்கடியான காலகட்டத்திலும் தங்கம் அவசியமான முதலீடாகவும் மாறியுள்ளது. இதற்கிடையில் தான் சர்வதேச சந்தை நிலவரம், தேவை, முக்கிய காரணிகளுக்கு ஏற்ப மாற்றம் காணும் எம்சிஎக்ஸ் தங்கத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 3- 5% வீழ்ச்சி:
கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலையானது மிகப்பெரிய அளவிலான ஏற்றத்தினை கண்டுள்ளது. எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பு ஆண்டில் ஒரு சரிவினைக் கண்டுள்ளது. இது 25,000 ரூபாயில் இருந்து, 56,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய ஆண்டுகளை போல் அல்லாமல் 3 - 5% சரிவினைக் கண்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளனர். இது தங்கம் மீதான முதலீட்டாளர்களுக்கு நீண்டகால நோக்கில் இந்த ஆண்டில் கணிசமான இழப்பினையே கொடுத்துள்ளது.

நடப்பு ஆண்டில் தங்கம் மீதான நாட்டம் சரிவு :
நடப்பு ஆண்டில் கொரோனாவின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்தாலும், சர்வதேச பொருளாதாரம், பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம், கிரிப்டோக்கள் மீதான ஆர்வம் உள்ளிட்ட பலவும் தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைத்துள்ளன.
பங்குசந்தைகள் மீதான ஆர்வம் :
சர்வதேச சந்தைகள் மீதான பங்கு சந்தைகள் மீதான ஈர்ப்பின் காரணமாக, சந்தையானது சரிவினைக் கண்டாலும், மீண்டும் குறைந்த விலையானது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால் தொடர்ந்து சர்வதேச சந்தைகள் முதலீடுகள் செய்யப்படுவதும், வெளியேறுவதுமாகவே இருந்தது.
இது தங்கத்தின் மீதான ஆர்வத்தினை குறைத்தது. எனினும் கொரோனா பரவல் உள்ளிட்ட பலவும் தங்கம் விலையானது பெரியளவில் சரிவதை தடுத்தன. மேலும் சர்வதேச அளவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த முதலீடாக ஆக தங்கம் பார்க்கப்பட்டது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்தது.
புதிய ஆண்டில் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள்:
இந்நிலையில் வரவிருக்கும் புதிய ஆண்டில் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் தங்கத்தில் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என துறைசார் நிபுணர்கள் கணித்துள்ளனர். பொதுவாக வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
அதேவேளை 2022ல் தங்கம் விலையானது மூன்று முறையாவது அதிகரிக்கப்படலாம் என அமெரிக்க முன்னதாக கூறியிருந்தது. இதனால் தங்கம் அடுத்த ஆண்டிலும் தனது கம்பீரத்தினைக இழக்குமா? பாதுகாப்பு புகலிடம் என்ற பெயர் மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
குறைந்த விலையில் வாங்கலாம் எனினும் தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் 10 கிராமுக்கு அதன் வரலாற்று உச்சத்தில் இருந்து 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகின்றது. ஆக குறைந்த விலையானது பலரையும் வாங்க தூண்டலாம்.
ஆக இதனால் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க கூடும். மேலும் நீண்டகால நோக்கில் பணவீக்கமும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. பொருளாதார வளர்ச்சி சரிவு அடுத்த ஆண்டில் ஜிடிபி விகிதம் நேர்மறையாக இருக்கலாம்.
எனினும் ஒரு கீழ் நோக்கிய திருத்தம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் சர்வதேச பொருளாதாரம் 5.9% வளர்ச்சி காணலாம் என்றும், இது 2022ல் 4.9% வளர்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்விட்டி சந்தை:
ஓவர் வேல்வியூவில் பங்குகள் ஈக்விட்டி சந்தையிலும் பங்குகள் ஓவர் வேல்யூவில் இருப்பாதால் ஒரு பெரும் சரிவு இருக்கலாம். ஆக அந்த சரிவு தங்கத்திற்கு சாதகமான அமையக்கூடும் என கருதப்படுகின்றது. ஆக மொத்தத்தில் தங்கம் விலை குறைந்தாலும், பெரியளவில் குறையாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக 10 கிராமுக்கு 40,000 - 42,000 ரூபாய் முக்கிய சப்போர்ட் லெவல் ஆகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 54,000 - 56,000 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கம்:
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.80 டாலர் அதிகரித்து, 1818.90 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சந்தையில் வெள்ளி:
அதேவேளை தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.47% அதிகரித்து, 23.168 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது.
நீண்டகால நோக்கில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை:
தங்கம் விலையானது இந்திய சந்தையில் சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 47,874 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது.
இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தினசரி கேண்டில் பேட்டர்னில் டபுள் பாட்டம் பார்ம் ஆகியுள்ளது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை :
தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 103 ரூபாய் அதிகரித்து, 62,263 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை :
ஆபரணத் தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 23 ரூபாய் அதிகரித்து, 4525 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 36,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து, 4,937 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 39,496 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்:
இதே போல வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா குறைந்து 65.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 654 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.