உலக சந்தை தாக்கம் ; இலங்கையில் தங்க விலை எதிர்பாராத உயர்வு
இன்றையதினம்(23) தங்கவிலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.