இன்று இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப்படுத்திய தங்கத்தின் விலை!
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்தது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதும் பின்னர் குறைவதும் என இருந்து வந்த நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,508-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளதுடன் ஒரு கிராம்வெள்ளியின் விலை ரூ.1.10 குறைந்து, ரூ.65.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,500-க்கு விற்பனை செய்யப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது