இலங்கையில் சிறுமி மீது துப்பாக்கிச்சூடு ; அதிர்ச்சி காரணம் வெளியானது
கொஹுவல, சரணங்கர, போதிவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், வீட்டின் அருகே இருந்த 17 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிகிச்சையில் சிறுமி
துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதன்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
கருப்பு ஜாக்கெட் அணிந்து முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்கள். பிஸ்டல் வகை துப்பாக்கியால் இரண்டு பேர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுமி கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்களுக்கு இடையேயான தகராறே துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.