ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் ; 19 இலங்கையர்கள் பாதுகாப்பாக மீட்பு
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை நோக்கி இஸ்ரேல் தற்போது வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மோதல் தீவிரமடைந்துள்ளது.
இன்று மாலை 'ரொய்ட்டர்ஸ்' Reuters வெளியிட்ட காணொளியில், பெய்ரூட்டின் தெற்குப் புறநகரப் பகுதிகளில் தொடர்ச்சியான வெடிப்புகள் இடம்பெறுவது பதிவாகியுள்ளது.
அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகையால் சூழப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
National News Agency (NNA) வெளியிட்ட தகவலின்படி, தாக்குதல்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 149 பேர் வரை காயமடைந்துள்ளனர்.