மதுரோவுக்கு சுவீஸ் அதிரடி நடவடிக்கை ; 687 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்
சுவீஸர்லாந்து மத்திய அரசு, நிக்கோலஸ் மதுரோவுடனும் அவருடன் தொடர்புடைய நபர்களுடனும் தொடர்புடையதாக கூறப்படும் 687 மில்லியன் சுவிஸ் பிராங்க் (CHF) மதிப்பிலான சொத்துக்களை உடனடியாக முடக்கிவிட்டது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முடக்கி வைத்த சொத்துக்கள் சுவீஸின் வங்கிகளில் உள்ளவை மற்றும் மதுரோவினை சுற்றியுள்ள நெருங்கிய வட்டார நபர்களின் பெயர்களில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்பு குற்றவியல் விசாரணைக்கு உட்பட்டு மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்கள் தற்காலிகமாக தடைக்கப்பட்டிருந்ததாகவும், இப்போது மீதமுள்ள 239 மில்லியன் பிராங்க் சொத்துக்களையும் முடக்கி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் உள்ளது.
இந்த முடக்கம் Money Laundering Reporting Office Switzerland (MROS) வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டதாகும்.
சுவீஸ் மத்திய அரசு இந்த நடவடிக்கையால், மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் வெளிநாட்டுக்கு மாற்றப்படாமல் தடுக்கும் நோக்கத்தைக் குறிப்பிடுகிறது.
இந்த சொத்துக்கள் பின்னர் விசாரணையில் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், அவை வெனிசுவெலா மக்களுக்குத் திரும்ப வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.