போதையில் வீதியில் சென்றவர்களிடம் தகராறு; இளம் வர்த்தகர் கைது
கொழும்பு பொரெல்லாவில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் சாலையைக் கடந்த இருவரைத் தாக்கியதாக ரத்தின வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரெல்லா கனத்தா சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்தபோது, பாதசாரிகள் கடக்கும் இடத்தில் (Pedestrian Crossing) சாலையைக் கடந்த இருவரை 37 வயதுடைய குறித்த ரத்தின வியாபாரி ஒருவர் தாக்கியுள்ளார்.

தனது சொகுசு ஜீப்பின் ஹார்னை அவர் ஒலிக்கச் செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தாக்குதலில் முடிந்துள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பொரெல்லா காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கஞ்சா உட்கொண்டிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.