மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மதுரையில் பிளஸ்-2 மாணவியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தியதில், மாணவி மூன்று மாதக் கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
மதுரை மேற்கு ஒன்றிய விரிவாக்க சமூக நல அலுவலராகப் பணியாற்றும் ராஜாத்திக்கு, குழந்தைகள் நல உதவி எண்ணின் ஊடாக இது தொடர்பான இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அவர் மேற்கொண்ட விசாரணைகளில், பீ.பீ. குளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பாடசாலை ஆசிரியரான 30 வயதுடைய சந்தோஷ்குமார் என்பவர், அரசுப் பாடசாலையில் கல்வி பயிலும் பிளஸ்-2 மாணவியுடன் பழகி அவரைத் திருமணம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.
மேலும், மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர் மூன்று மாதக் கர்ப்பமாக இருப்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சமூக நல அலுவலர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சிறுமியைத் திருமணம் செய்தமை தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார், ஆசிரியர் சந்தோஷ்குமாரைக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.