எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 180,000 எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் (Litro Gas Company) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (30-12-2021) அறிவித்துள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில், அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் முறையாக பரிசோதிக்கப்படுவதையும், சிலிண்டர்களை பராமரிப்பதில் ஏற்படும் தாமதத்தை தடுப்பதற்காகவும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளையும் நிறுவனம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 180,000 எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளாந்தம் நிரப்புதல் மற்றும் விநியோகம் 24 மணி நேரமும் முன்னெடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் எவ்வித தாமதமும் இன்றி சந்தைக்கு எரிவாயுவை வழங்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.