யாழில் கொழுந்துவிட்டு எரிந்த குப்பை மேடு ; புகையால் இரவு முழுவதும் அவதிப்பட்ட மக்கள்
Jaffna
Sri Lankan Peoples
Protest
By Sahana
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம் இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர் தீ பரவியத்தை அடுத்து நீண்ட பல மணிநேர பெரும் போராட்டத்தின் மத்தியில் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்
குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அயலூர் மக்கள் இரவு முழுவதும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்

அந்நிலையில் இன்றைய தினம் அப்பகுதிகளில் மாநகர சபை குப்பைகளை கொட்டக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை அடுத்து, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்
கீரிமலையில் கொட்டப்பட்ட வைத்தியசாலையின் ஆபத்தான மருத்துவ கழிவுகள் ; பிரதேச சபை உறுப்பினர்கள் கடும் குற்றச்சாட்டு




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US