கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்: வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்!
கிளிநொச்சியில் உள்ள வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து இனம் தெரியாத குழு ஒன்று சரமாரி தாக்குதல் நடத்தியதில் 5 காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (26-09-2023) நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு சிறு கொடுக்கல் வாங்கலே காரணமாக அமைந்துள்ளது.
வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியுள்ளது.
சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.
இதேவேளை குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் கூறிய ஆதங்களினால் தாக்கியதாகவும் தடுத்த பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 20க்கு அதிகமானோர் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த குழுவினர் சிசிரிவி கமராக்கள், மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி அழித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கி பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பெறுமதியான பொருட்களை சேதமாக்கியதுடன் சிலவற்றை அபகரித்தும் சென்றுள்ளனர். மேலும் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஐந்து பேர் வைத்தியசாலையில்
சம்பவத்தில் 4 பேர் வைத்தியசாலையில் வெட்டுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளார்.
அவரது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே சிகிச்சை பெற்று வருவதுடன், வெளிநாட்டு பிரஜைக்கும், அவரது மனைவிக்கும் தாக்குதல் மேற்கொண்டமையால் சிறு உபாதைக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்திகள்
கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்