கிளிநொச்சியில் பெற்றோல் குண்டு வீச்சு; பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
கிளிநொச்சி வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாதவர்களால் வீட்டின் கதவு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவை சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற வாக்கு வாதம்
அவ் வீட்டில் நேற்றைய தினம் பகல்வேளை உறவினர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருந்துள்ளது.
அத்தோடு சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துவிட்டு திரும்பி வரும் வழியில் வீட்டு உரிமையாளர் மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திருவையாறு பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.