யாழில் இரகசிய தகவலால் பல வருடங்களாக அரங்கேறிய செயல் அம்பலம்
யாழ்ப்பாணம் - துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபரொருவரை நெல்லியடி பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துன்னாலை காட்டுப் பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

தப்பி ஓட்டம்
தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சுற்றிவளைப்பில் 50000 ml கசிப்பு, 780,000 கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும், தடைய பொருட்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு முன்வைக்கவுள்ளனர்.