சனி பகவானின் நட்சத்திர மாற்றம் ; டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். சனிபகவானின் ஒவ்வொரு இயக்கமும் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும்.
ஜனவரி 20 ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கப் போகிறார். இது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமான பெயர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களையும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள்?
மிதுனம்: சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில், அவர்களின் வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படலாம். வேலையில்லாதவர்களுக்கு, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன, மேலும் வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

கடகம்: சனிபகவானின் நட்சத்திர மாற்றம் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் ஆசைப்பட்ட பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படலாம். அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்பொது வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும். மேலும் அவர்களின் குடும்பத்தினருடனான உறவு வலுவடையும். திருமண வாழ்க்கையில், அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

மகரம்: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது நிலையாக இருக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். மேலும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
