கம்பளை மாணவி கடத்தப்பட்ட விவகாரம்; காப்பாற்ற முயன்ற இளைஞர் கூறிய தகவல்!
கம்பளை தவுலாஹல பகுதியில் உயர்தர பயிற்சி (Tuition) வகுப்பில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த 19 வயது பள்ளி மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிசிடிவி காட்சிகளில், வேறோர் இளைஞன் அவளைக் காப்பாற்ற போராடுவதையும், அந்த இளைஞன் சுமார் 500 மீட்டர் தூரம் வேனில் தொங்கிக் கொண்டு சென்றபோது சந்தேக நபர் அவரைத் தாக்கியதில் இளைஞர் தரையில் வீழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்த இளைஞர் கூறுகையில்,
திருமணவிவகாரமே காரணம்
வீதியில் வந்த மாணவி கடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த நான் அந்த வாகனத்திற்குள் ஓரளவு ஏறிவிட்டேன் அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன்ர்.
எனினும் வாகனத்தின் மூவர் இருந்தனர்,அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள் என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்
நான்வீதியில் விழுந்தேன் அவ்வேளை தலை கைகாலில் காயங்கள் ஏற்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை(11) மாணவியொருவர் கடத்தப்படுவதை கண்ட வீதியால் சென்ற இளைஞர் அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.
சம்பவத்தில் ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்விகற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளையே கடத்தபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமணவிவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் கிடைத்துள்ளன.
சம்பவம் தொடர்பில் வாகனச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.