இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் அருள்கொண்டு ஆடிய யானை ; பக்தர்கள் பரவசம்!
இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த யானை அம்மனின் அருள்கொண்டு ஆடிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் பெருங்கோயிலின் 5-வது திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழா பெப்ரவரி 1, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

யானையின் அருள்கண்டு மெய்மறந்த பக்தர்கள்
இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள கோயில்.

இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் "கனகாம்பிகை" எனும் பெயர் தாங்கி மூல தெய்வமாக உள்ளார்.
இந்நிலையில் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழாவில் கல்ந்துகொள்ள அழைத்துவரப்பட்ட யானை அம்மனின் அருள்கொண்டு ஆடியமை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.


