முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு
மருத்துவமனையில் இருந்தபோது திடீரென காலமான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 17 திகதி அன்று மாலை 5.00 மணிக்கு கண்டியில் உள்ள நித்தவெல மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது உடல் இன்று மாலை முதல் மஹியாவவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
57 வயதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறிது காலமாக கடுமையான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (15) காலை காலமானார்.