சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் கைவரிசை ; தமிழ்நாட்டை சேர்ந்த பெண் மீது விசாரணை
சுவிட்சர்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கைவரிசை சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் தமிழ்நாட்டு பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலமுறை பொலிசாரால் பிடிபட்டுள்ளதோடு, இதுவே முதல்முறை அல்ல என்பதை அதிகாரப்பூர்வமாக நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இந்த விவகாரம் தொடர்பாக, காவல் துறை அதிகாரிகளுக்கும், கமிஷனர் அவர்களுக்கும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் — கணவர், மகன், சகோதரி உள்ளிட்ட அனைவரும் நமக்குத் தெரிந்த நிலையில் உள்ளனர்.
அவர்களின் புகைப்படங்கள் உட்பட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டின் சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் நிலையத்தில் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்த விசாரணைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சுவிஸில் துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவின் போது கடந்த சனிக்கிழமை பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக சுவிஸ் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் பெண்கள் குழுவாக சேர்ந்து திருடி உள்ள நிலையில், அவர்களின் காணொளி ஆதாரங்கள் ஆலயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடியவர்கள் ஆலய கண்காணிப்பு கமராவில் பார்த்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே திருடியவர்கள் ஏதோ ஒரு வழியில் பொருட்களை ஆலயத்தில் வந்து ஒப்படைக்குமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சேர்க்காத பட்சத்தில் அந்த ஆதாரங்கள் சுவிஸ் பொலிஸாரிடம் கொடுக்கப்படும் என ஆலய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து இந்து ஆலயங்களில் திருடர்களின் கைவரிசை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை பல திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்ட கும்பலானது இவ்வாறாக பல ஆலயங்களில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை சுவிஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.