18 வருடத்திற்கு பின் இலங்கையில் மூவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ; நடந்தது என்ன?
களுத்துறை மேல் நீதிமன்றம், வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற குத்திக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூன்று பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
குடாவஸ்கடுவ, லிட்டில்டன்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார, ‘ராலஹாமி’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் சுகத் குமார மற்றும் ‘பெட்டா’ என அழைக்கப்படும் சமித சிசிர குமார ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளில், குடாவஸ்கடுவ லிட்டில்டன்வத்தைப் பகுதியில் அமைந்திருந்த மரணவீட்டில் சமிந்த குமார என்பவர் கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
18 ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்தார்.
இதனையடுத்து, குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.