எரிபொருள் ஆர்டர் இல்லை; ஜனாதிபதி அலுவலகம் முன் குவிந்த விநியோகஸ்தர்கள்
இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் தற்போது கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் முன் காலி முகத்திடல் மைதானத்தில் கூடி வருகின்றனர்.
இன்று ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்குவதற்காக அவர்கள் அங்கு கூடினர்.
48 மணி நேரத்தில் எரிபொருள் ஆர்டர் இல்லை
எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் கமிஷன் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேவேளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அந்த கமிஷன் தொகையை ரத்து செய்ததால் தற்போது சர்ச்சைக்குரிய நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில், கடந்த 48 மணி நேரத்தில் எந்த எரிபொருள் ஆர்டரும் செய்யப்படவில்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை எரிபொருள் ஆர்டர் செய்வதை தவிர்க்கப் போவதாக சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்தார்.