தமிழர் பகுதியில் குப்பை கொட்டிய வர்த்தகருக்கு நேர்ந்த கதி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் வீதியில் குப்பைகளை கொட்டிய வர்த்தகர் ஒருவருக்கு எதிராக புதுக்குடியிருப்பு சுகாதார பரிசோதகர்களால் நேற்று (30) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு நகரில் இயங்கி வரும் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர், வர்த்தக நிலையத்திற்கு முன்பாக வீதியில் குப்பைகளை கொட்டியதற்கு எதிராக சுகாதார பரிசோதகர்களால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேலதிக விசாரணை
குறித்த வழக்கானது நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 13.03.2026 ஆம் திகதிக்கு வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் வர்த்தகர்கள் சுகாதாரத்தை பேணி நடக்க வேண்டும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்